2019 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தின் சமய நல்லிணக்கத்துக்கான தேசமானிய கௌரவ விருதை சகோதரர் மொஹம்மத் கியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவ் விசேட நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி கொழும்பு BMICH அரங்கில் இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்களாக பல சமூக நிறுவனங்கள் ஊடக இன,மதம் பராது பல சமூக சேவைகளை செய்துவரும் வடதெனிய பகுதியை சேந்த (Komaki Trading Pvt Ltd.) நிறுவனத்தின் உரிமையாளரான சகோதரர் மொஹம்மத் கியாஸ் அவர்களுக்கே இவ் விசேட தேசமானிய கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தனியான நிறுவனமொன்றி உரிமையாளரான மொஹம்மத் கியாஸ் அவர்கள் நீண்ட நாட்களாக ஸம் ஸம் நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றி வருவதோடு ,உடுநுவர ஜம்மியத்துல் உலமாவின் அனுசரணை குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன,மதம் பராது நான் ஆற்றிய துரித சமூக சேவையின் பணியே இந்த கௌரவ விருதுக்கான வெற்றி என அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த விசேட கௌரவ விருதை பெற்று முழு நாட்டுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்துக்கொடுத்த சகோதரர் கியாஸ் அவர்களுக்கு எமது Fastnews1stமுதல்வேகச்செய்தி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!
0 Comments