இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து உடுநுவர பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுபிடிய,பூவெலிக்கட,தெள்ளங்க ,கெலிஓய பகுதிகளில் பட்டாசுகொளுத்தி மக்கள் கொண்டாடியதோடு,விசேடமாக கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றியை வரவேற்று தெள்ளங்கையில் மோட்டார்பைக் பேரணியும் இடம்பெற்றுள்ளது.
மேலும் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற ஆகக் கூடுதலான வாக்குகளை கோத்தபாய வென்றுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 8 இலட்சத்து 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளையும் கொழும்பு மாவட்டத்தில் 7 இலட்சத்தை தாண்டிய வாக்குகளையும், குருணாகல் மாவட்டத்தில் சுமார் 7 இலட்சம் வாக்குகளையும் கோத்தபாய வென்றுள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்றிருந்தார்.
எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவை விட 13 இலட்சத்து 60 ஆயிரத்து 16 மேலதிக வாக்குகளை பெற்று கோத்தபாய வெற்றி பெற்றுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒரு கோடி 33 இலட்சத்து 87 ஆயிரத்து 957 வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்.
ஒரு கோடி 32 இலட்சத்து 52 ஆயிரத்து 499 வாக்குகள் செல்லுபடியானவை.
இது 83.72 சதவீதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எமது Fastnews1stமுதல்வேகச்செய்தி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!.
0 Comments