Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

தீவிரவாதிகளை அளித்து ஒழிக்க தீவிரசோதனை வேட்டையில் இராணுவம்;இன்று ஐஸ்'ன் பெரும்தொகை போதை மருந்துகள் கண்டுபிடிப்பு


ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தே இந்த மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதில், கருக்கலைப்பு மாத்திரைகள், போதை மாத்திரைகள், பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 கருக்கலைப்பு மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட இந்த மாத்திரைகள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் குழந்தை பெறமுடியாத நிலை ஏற்படும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments