கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253 என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட பிழையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. எனினும், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments