வடதெனிய அல்-அக்ஸா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு "அல்-சுபைர் நீர் விநியோக திட்டத்தின் "கீழ் பாடசாலைக்கான சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கும் விசேட நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நீண்ட நாட்களாக குடி நீர் வசதியின்றி அவதியுற்று இருந்த இப் பாடசாலை மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உக்குவளை (அல்-சுபைர் பவுன்டேஷன்) குழுவினர் நேற்றைய தினம் அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்றப்புக்கு மத்தியில் நீர் விநோயோகத்திட்டத்தினை அங்குராப்பணம் செய்துவைத்தனர்.
இவ் விசேட நிகழ்வின் பிரதம அதிதியாக உக்குவளை ஷபீருஸ் ஸலாம் மத்ரஸாவின் பிரதம பணிப்பாளரும், மாத்தளை மாவட்ட உலமாசபை தலைவருமான அஷ்ஷெய்க் ரயீஸ் யூசுபீ (தேவ்பந்தி) அவர்கள் கலந்துகொண்டு விசேட உறையும் நிகழ்த்தினார்;
மற்றும் இன்னும் பல விசேட பிரமுகர்கள்,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,புத்திஜீவிகள்,ஊர் மக்கள் பெரும்திரளானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நீர் விநியோக திட்டம் குவைத் நாட்டை சேர்ந்த மர்ஹும் பதுர் மொஹம்மத் யசீர் அவர்களின் பெயரில் உக்குவளை அல்-சுபைர் பவுன்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாமித் அல் ஹவ்ஜான் அவர்களின் மூலம் நண்கொடை செய்யப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த குழாய் நீர் கிணறு அமைக்கப்பட்டு நேற்றைய தினம் மக்கள் பாவனைக்காக அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி தொகுப்பு..
தகவல்:மொஹமட் ஹலீம்
0 Comments