Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

போதைப்பொருள் பாவனையில் இருந்து உடுநுவர மக்களை பாதுகாப்போம்!விசேட செயலமர்வு நேற்று..

இலங்கையில் தற்போது போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை ஆகியன பெரும் அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது.

இதனை உடனடியாக ஒழிக்க அரசு மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் உடுநுவரை பகுதியிலும் பரவலாக மாணவர்கள்,பெரியோர்கள் மத்தியில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ளது.

இதனை உடுநுவர மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும் எனும் நோக்கில் Udunuwara United Organization 

அமைப்பினரும் பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இதன் முதல் நிகழ்வாக நேற்றைய தினம் "போதைப்பொருள் பாவனையில் இருந்து  உடுநுவர மக்களை பாதுகாப்போம்!" எனும் தொனிப்பொருளில் மாபெரும் விசேட செயலமர்வு ஒன்று ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு நேற்று காலை அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட வளவாளர்களாக திருமதி I.F.F. இஸ்ஸதீன்,எம். நவ்பத்,திருமதி.மங்களா ஆகியோர் மற்றும் பாடசாலை அதிபர் எம்.ஜே.எம் ஹிஜாஸ்,பழைய மாணவர்கள்  சங்கத்தின் செயலாளர்  இம்தியாஸ் ஆகியோரும் கலந்துகொண்டு விசேட உரையும் நிகழ்த்தினர்.

மேலும் இவ் செயலமர்வில் விசேட பிரமுகர்கள்,ஆசிரியர்கள்,புத்திஜீவிகள் மற்றும் ஊர் மக்கள் பெருந்திரளானோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். 

இவ் அமைப்பின் எதிர்கால திட்டங்கள்யாவும் சிறப்பாக நிறைவேற்ற நாம் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபடுவோம்!

Post a Comment

0 Comments