கெலிஓய,கழுகமுவ மதுரஸத்துல் இஸ்லாஹ் மதுரஸா மாணவர்களுக்கான 11ஆம் வருட பட்டமளிப்புக்கான கலைவிழா நிகழ்வுகள் 06)நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு மதுரஸத்துல் இஸ்லாஹ் மதுரஸாவின் தலைவர் ஜனாப் நயீம் அவர்கள் தலைமையில் கழுகமுவ தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் விசேட அதிதியாக அக்குரனை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும்,வடதெனிய கதிஜதுள் குப்ரா அரபுக்கல்லூரியின் செயலாளருமான ஆசிரியர் எஸ்.எம்.யு.எம் சாஜஹான் உடையார் அவர்கள் கலந்துகொண்டு விசேட உறையும் நிகழ்த்தினார்.
மேலும் விசேட பிரமுகரா மஸ்ஜித்துல் ஹுதா ஜும்மா பள்ளிவாயல் தலைவரும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியுமான ஆசிரியர் ஏ.ஜெ.எம் நயீம் மற்றும் இன்னும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இம் மாணவ மணிகளின் திறமைகளை வெளிக்காட்டும் அறிவு சார்ந்த விசேட கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஊர் மக்கள் பெருந்திரளானோர் வருகைதந்திருந்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி தொகுப்பு...
0 Comments