உடுநுவர,மீவெலதெனிய ஜும்மா பள்ளிவாயல் நிர்வாக சபையினரின் சமூகப்பணி திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கான பைத்துல்மால் நிதியம் ஒன்றை நிறுவுவதட்கான அங்குரார்ப்பண நிகழ்வு 29)நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வு நேற்றைய தினம் மீவெலதெனிய மஸ்ஜிதுல் ஹுதா ஜும்மாஹ் பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் ஆதம் லைப்பை அவ்ர்கள் தலைமையில் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் விசேட அதிதியாக
அக்குரனை பைத்துல்மால் நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் இஸ்ஸதீன் அவர்களும் மற்றும் உடுநுவர பிரதேச சபை உப தலைவர் சப்பான் ஹாஜி ஆகியோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் நிகழ்வின் விசேட பேச்சாளராக திஹாரி பாfதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும்,கலாநிதியுமான அஷ்ஷெய்க் ஹாரிஸ்(நளீமி) அவர்கள் கலந்துகொண்டு விசேட உறையும் நிகழ்த்தினார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி தொகுப்பை இங்கு காணலாம்.
0 Comments