வடதெனிய சமூக வலையத்தள(Social Network)இளைஞர்கள் சங்கத்தின் மூன்றாவது வருடாந்த இரத்ததான நிகழ்வு 18)நேற்று வடதெனிய 7 ஆம் கட்ட பள்ளிவாயலில் நடைபெற்றது.
நிகழ்வில் விசேட அதிகளாக வெலம்பொட பொலிஸ் பொறுப்பதிகாரி ஷாந்த பண்டார,வடதெனிய பிரிவு கிராம சேவகர் மற்றும் வடதெனிய பள்ளிவாயல் தலைவர்,நிருவாக உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் ,மாலை 3 மணிவரை கம்பளை வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் குழுவின் ஏட்பாட்டில் நடத்தப்பட்ட இவ் இரத்ததான முகாமில் சுமார் 70 பேர்கள் வரை கலந்துகொண்டு இரத்தம் தானம் செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெவித்தார்.
வடதெனிய பகுதியின் வளர்ச்சிக்காக பல சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் இவ் சமூக வளையதள இளைஞர்கள் சங்கத்தின் மறுமொரு வெற்றி இலக்காக இந்த மூன்றாவது இரத்ததான முகாம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments