அடுத்த ஆண்டில் மேல், தெற்கு மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படும் என, சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தனது கிராம மற்றும் நகர உறுப்பினர்களை இழந்து பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கிராம மற்றும் நகர உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் சாவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
மேல் மாகாணத்தில் வாத்துவ மற்றும் தல்பிட்டிய பிரதேசங்களில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகங்களை திறந்து வைத்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments