
சிறுபான்மை சமூகங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை ஏற்றக்கொள்ள முடியாது எனவும் நாட்டின் சகல இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும் ஜனசெத்த முன்னணியின் தலைவர் பத்தரமுல்ல சீலரட்ன தேரர் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதம் பாராட்டாது அனைவரினதும் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சமூகக் கட்டமைப்பில் வன்முறைச்
சம்பவங்களுக்கு அனுமதியளிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை சமூகம் மீதான தாக்குதல் தேசத்தின் நலன்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இன நல்லிணக்கத்தின் மூலம் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அனைத்து இன சமூக மக்களும் ஒன்றிணைந்து தாய் நாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டமென அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments