Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாகிஸ்தானில் வௌ்ளம்; 118 பேர் பலி

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பாகிஸ்தானின் நரோவல், ராஜன்பூர் ஆகிய பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்குண்டு சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன்
1746 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 4 இலட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் காணியில் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக 94 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தற்போது 9200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments