Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கொள்ளுப்பிட்டியில் பஸ் டயரில் சிக்கி பெண் உயிரிழப்பு

கொள்ளுப்பிட்டி ரயில்வே வீதியில் பஸ் டயரில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் ஏறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் இடறி வீழ்ந்தமையினால் பின்புறமாக வந்த பஸ்ஸின் டயரில் அகப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே
உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments