Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

ஈரல், சிறுநீரகத்தை சிதைக்கும் பரசிட்டமோல் பாவனை அதிகரிப்பு

 ஈரல், சிறுநீரகத்தை சிதைக்கும் பரசிட்டமோல் பாவனை அதிகரிப்பு!  நாட்டிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் பரசிட்ட மோல் மாத்திரை பாவனை கடந்த வருடம் (2012) 250 மில்லியன்களால் அதிகரித்திருப்பது தெரிய வந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடாத்தி அது தொடர்பாகத் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மருந்துப் பொருள் விநியோகப் பிரிவுப் பணிப்பாளருக்கு
அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் வருடா வருடம் 560-570 மில்லியன் பரசிட்டமோல் மாத்திரைகள் தான் பாவிக்கப்படுவது வழமை என்றாலும் கடந்த வருடம் இம்மாத்திரைப் பாவனை 810 மில்லியன்கள் வரை அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 2012ம் ஆண்டில் மாத்திரம் பரசிட்டமோல் பாவனை 250 மில்லியன்களால் அதிகரித்து இருக்கின்றது. இம் மாத்திரைப் பாவனையில் கடந்த வருடம் இவ்வாறான திடீர் அதிகரிப்பு ஏற்பட எந்த நியாயமும் இல்லை.

அதேநேரம் ஈரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களின் பாதிப்புகளுக்குப் ‘பரசிட்டமோல்’ பெரிதும் உதவுவது தெரிய வந்திருக்கின்றது. இதனால் இம்மாத்திரைப் பாவனையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில்தான், இம்மாத்திரைப் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. அதனால் இம்மாத்திரை பாவிக்கப்பட்டிருக்கின்றதா, அல்லது திருட்டுத்தனமாக களவாடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றதா, என்பது குறித்து ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருக்கின்றார்.

Post a Comment

0 Comments