Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

திருமணப் பதிவு கட்டணம் வேண்டாம் - ஆதிவாசிகள்

  வெள்ளையர் ஆட்சியில்கூட இல்லை: திருமணப் பதிவு கட்டணம் வேண்டாம் - ஆதிவாசிகள்திருமணப் பதிவிற்கென புதிதாக அறவிடப்படும் பணத்தை ஆதிவாசிகளிடம் அறவிடக்கூடாது என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே எத்தோ கோரிக்கை விடுத்துள்ளார்.
திருமணப் பதிவிற்காக புதிதாக 5000 ரூபா அறவிடப்படுகின்றமை காட்டில், விவசாயத்தை நம்பி வாழும் ஆதிவாசிகளால் தாங்கிக் கொள்ள முடியாது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஆசிவாசிகளின் சம்பிரதாயத்திற்கு அமைய வரலாற்றில் திருமணப்பதிவு இடம்பெறவில்லை எனவும் தற்போதைய சந்ததியினருக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்வது, பாடசாலையில் சேர்ப்பது போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினை காரணமான திருமணப்பதிவு செய்து கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளையர்கள் நாட்டை ஆட்சி செய்தபோதுகூட ஆதிவாசிகள் மீது எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே எத்தோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments