
தேசியகீதத்துக்கு இன்று தமிழ் வசனங்களை சேர்த்திருக்கிறார்கள். நாளை அரபு வசனம் ஒன்றை முஸ்லிம்களுக்காக சேர்ப்பார்கள். என ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஒருமொழியில் மட்டுமே தேசியகீதம் இசைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது, உலகில் எல்லா நாடுகளிலும் பல்வேறு இனத்தவர்கள் வாழ்கின்றனர். எனினும் குறித்த ஒரு நாட்டின் தேசிய கீத்தத்தை அங்குள்ள ஒரு இனத்தின் மொழியே பிரதிபலிக்கும். இதனை அங்குள்ள ஏனைய சமூகத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு கெளரவம் அளிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இலங்கையின் தேசியகீதம் தற்போது ஒவ்வரு கதைகளின் பின்னால் துண்டு துண்டாக உடைக்கப்படுகிறது.
இன்று தமிழ் மொழியின் வசனங்கள் தேசிய கீத்தத்தினுள் ஏற்கப்படுகிறது. நாளை முஸ்லிம்களும் தமது மொழியையும் சேர்க்குமாறு கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்
0 Comments