Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

பாவனைக்கு உதவாத வெங்காய விற்பனை தொடர்பில் ஆராய குழு

பாவனைக்கு உதவாத வெங்காய விற்பனை தொடர்பில் ஆராய குழு இலங்கை சதொச களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோவின் ஆலோசனையின் படி அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய இக்குழு நாளை முதல் தமது நடவடிக்கைகளை
ஆரம்பிக்கவுள்ளது.

இந்த குழு நாடு முழுவதிலுமுள்ள சதொச விற்பனை நிலையங்களிற்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

கடந்த 29ஆம் திகதி நுகர்வோர் அதிகார சபை, இலங்கை சதொச விற்பனை நிறுவனங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது பாவனைக்கு உதவாத 44,700 கிலோகிராம் பெரிய வெங்காயத்தை கைப்பற்றி இருந்தது.

Post a Comment

0 Comments