
ஊடகவியலாளர் சந்திப்போன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
எங்கள் நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்களிடம் எவ்விதமான வேறுபாடுகளும் இல்லை. நாம் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் போல வாழ்கிறோம். எனினும் சிலர் எங்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயட்சிக்கின்றனர்.
எமது ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அண்மையில் சவூதியிஉல் மரண தண்டனைக்குள்ளான ரிசானா முஸ்லிம் யுவதிக்காக முஸ்லிம் மக்களை போன்றே சிங்களவர்களும் தங்களது அனுதாபங்களையும் கவலையினையும் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்தலாம்.
30 வருடகால யுத்தத்திலிருந்து மீண்டிருக்கும் நாம் தற்போது இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதனை ஊடகங்கள் மூலமாக நாம் இன்று மேற்கொள்ள வேண்டும். அன்று வர்த்தக நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முஸ்லிம் ஆண்கள் மட்டுமே இலங்கைக்கு வந்தனர். எனினும் இங்கு வந்த அவர்கள் எங்களது சிங்கள பெண்களை மணமுடித்தார்கள். அப்படி பார்க்கும் பொது நாமனைவரும் உறவினர்களாகிறோம்.
அன்று முதல் நாமனைவரும் அய்ய்க்கியமாகவே வாழ்ந்துவந்தோம். அதற்கு தளதாமாளிகையும் அதன் அருகில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசலும் சாட்சியாகும். இதுவரை எங்களிடம் பேதங்கள் இருக்கவில்லை. நாம் எமது மத்ததையும் முஸ்லிம்கல் அவர்களது மதத்தையும் சுதந்திரமாக பின்பற்றினார்கள். எவ்விதமான பிணக்குகளும் ஏற்படவில்லை.
தற்போது முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்த சிலர் சதிமுயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது தேசிய நல்லிணக்கத்துக்கு மிகப்பெரிய சவாலாகும். அதனால் நான் சிங்கள முஸ்லிம் இருபாலாரிடமும் இது தொடர்பில் மிக அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
0 Comments