
இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தருவாயில் இந்திய ,பிலிப்பைன்ஸ்
மற்றும் இந்தோனேஷியப் பெண்களும் அடங்குவதாக குறித்த பத்திரிக்கை மேலும்
சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இவ்வாறு மரண தண்டனை அபாயத்தை எதிர்கொள்வோருக்கு உரிய சட்ட உதவிகள்
கிடைத்ததாக தெரியவில்லை.இந் நிலையில் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள்
தொடர்பில் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது.
இம்மரண தண்டனைக்கைதிகளில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் போது தனது எஜமானரின்
புதல்வரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட முயற்சித்த போது
தற்காப்புக்காக குறித்த நபரை கத்தியினால் குத்திய
இந்தோனேஷியப்பெண்னொருவரும் அடங்குகிறார்.
சவூதியில் கடந்த வருடம் மட்டும் 69 பேர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியை பொருத்தவரை சுமார் 375000 இலங்கை பணிப்பெண்கள் சேவை செய்வதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments