Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

நாட்டின் பல பாகங்களில் போக்குவரத்து தடை

நாட்டின் பல பாகங்களில் போக்குவரத்து தடைநாட்டின் பல பாகங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் வீதிப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹொரவபொத்தான - திருகோணமலை, வாகரை - திருகோணமலை, முல்லைத்தீவு - மாங்குளம், வலப்பனை - பதியபெலல்ல ஆகிய வீதிகளூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாத்தான் - அரிப்பு, முருங்கள் - சிலாவத்துறை, சிலாவத்துறை - யாழ்ப்பாணம், மன்னார் - மதவாச்சி, மன்னார் - புத்தளம், சோமாவதி சுங்காவில் ஆகிய வீதிகளூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments