
கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் எதிர்வரும் 24
மணித்தியாளங்களிற்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் பட்சத்தில் குறித்த
பிரதேசங்கள் பாரிய ஆபத்திற்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இப் பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் மலை சரிந்து விழும் அபாயங்கள் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே இப்பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை மாத்தளை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக 16 வயதான சிறுமி ஒருவர்
உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியின் தாயார் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம்
தெரிவித்துள்ளது.
0 Comments