
இதன் துவக்க விழாவில், திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பிரபலமான பாடல்களைப் பாடி அசத்தினர்.
இந்த விழாவில், சிறுவர்கள் மூன்று பேர், பியானோ இசைக் கருவியை வாசித்து, அனைவரின் கைதட்டல்களையும் பெற்றனர்.
அதில் ஒரு சிறுவன்தான் அமீன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் அமீனின், முதல் மேடை நிகழ்ச்சி இது தான்.
இந்த அமீன் வேறுயாருமல்ல இசைப் புயல் ரகுமானின் மகன் தான். கடந்த ஒரு வருடமாக, சட்டர்ஜி மாஸ்டரிடம், பியானோ மற்றும் இசைப் பயிற்சி எடுத்து வருகிறாராம். துவக்க நிகழ்ச்சியில், தன் தந்தை இசை அமைத்த, ரோஜா படத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை, பியானோவில் வாசித்துக் காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
0 Comments