Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கடும் மழை வெள்ளம் காரணமாக உயிரிழப்பு 25ஆக அதிகரிப்பு..



கடும் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்வடைந்துள்ளதோடு, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகிறது.
கடும் மழையினால் சுமார் 68 ஆயிரத்து 900 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 66 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
18 ஆயிரத்து 753 பேர் தத்தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் 102  தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்ககாட்டுகிறது.
இயற்கை அனரத்தங்கள் காரணமாக 36 பேர் காயமடைந்துள்ளனர், இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையால் 358 வீடுகள் முற்றாகவும் 900ற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

Post a Comment

0 Comments