
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும்
மண் சரிவுகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட
குறைந்தது 13 பேர் உயிழந்துள்ளார்கள்.
பல மாவாட்டங்களில் பெரும் பாதிப்புகள்
பத்து
மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக சுமார் 90,000 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலரை இன்னும் காணவில்லை என்று அரச அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக கிழக்கு, மத்திய, சப்ரகமுவ
மற்றும் ஊவா மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக பல
பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் மண் சரிவுகளும்
ஏற்பட்டுள்ளன. மாத்தளைப் பகுதியிலேயே அதிகமான அளவுக்கு மண் சரிவுகள்
ஏற்பட்டுள்ளன.
நிவாரண நடவடிக்கைகள்

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள
நிலமை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு
வெளியேறி பொது இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்
வெள்ளத்தால் சூழப்பட்ட வேற்றுச்சேனை மற்றும்
மயிலவெட்டுவான் உட்பட சில கிராம மக்கள் படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டு
தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக 9000 பேர் அரச முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும
அவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் ஊட்டச் சத்துள்ள
பொருட்கள் வழங்கப்படுவதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப் பகுதியில்
இராணுவத்தினரின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
0 Comments