Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

இணையத்தின் மூலம் நிதி மோசடி செய்த 100 சீன பிரஜைகள் கைது


இணையத்தின் மூலம் நிதி மோசடி செய்த 100 சீன பிரஜைகள் கைதுஇணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த 100 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 26 சீன பெண்களும் அடங்குகின்றனர்.
நீண்ட காலகமாக இவர்கள் இணையத்தின் மூலம் நிதி மோசடி செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அனேகமானோர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் குறித்து குற்ற விசாரணை திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments