கம்பொலை, ஜீனராஜ மகளீர் பாடசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அப்பாடசாலையின் 1000 மாணவிகள் கம்பொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை பலாங்கொடை வெலிக்கபொல பிரதேச பாடசாலை ஒன்றிலும் சுகயீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் இத்திடீர் சுகயீனத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மாணவர்களுக்கு தீடீர் சுகயீனம் எற்பட்டமை குறித்து பயம் கொள்ளத் வெயில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments