பெட்ரோல் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் பெட்ரோல் வெளியேறி ஆறு போல ஓடத் துவங்கியது.
ஆறாகப்
பெருக்கெடுத்த அப்பெட்ரோலை பாத்திரங்களில் பிடித்துச் செல்ல பொதுமக்கள்
வந்த போது, டேங்கர்களில் ஒன்று வெடித்ததில் 25 பேர் பரிதாபமாகப்
பலியாகினர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் துயரச் சம்பவம்
மியான்மரில் சம்பவித்துள்ளது.
மியான்மரின்
மான்டலே நகரில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றிய ரயில் வெள்ளியன்று
காலை செட்கி நகர் அருகே சென்று கொண்டு இருந்தது. அந்த ரயிலின் 7
டேங்கர்களில் எரிவாயு, 2 டேங்கர்களில் பெட்ரோல் ஆகியன இருந்தன. இந்நிலையில்
திடீரென ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது.
டேங்க்கரிலிருந்து
ஆறாகப் பெருக்கெடுத்த பெட்ரோலை எடுத்துச் செல்ல காலி புட்டிகளுடன்
பொதுமக்கள் வந்தபோது,டேங்க்கர்களில் திடீரென தீப்பிடித்து வெடித்து
சிதறியது. இதில் 25 பேர் உடல் கருகி பலியானார்கள். 60க்கும் மேற்பட்டோர்
படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது.
0 Comments