
மேலும்
கருத்துத் தெரிவித்த அவர், இராணுவத்தை கட்டியெழுப்பல், நாட்டின்
பாதுகாப்பு,
ஸ்திரத்தன்மை, நீதி என்பவற்றை கட்டியெழுப்புதல் அவருடைய
வேலைத்திட்டங்களில் முதன்மையானதாக இருக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.
அத்துடன்,
அலி ஸெய்தான் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் வினைத்திறனுடன் தாம்
பங்குபற்றுவதாக லிபிய இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் தலைவர் பஷீர் கப்தி
மேலும் தெரிவித்துள்ளார்.
லிபிய
இடைக்கால அரசாங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக கடந்த
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாக்களிப்பில் அலி ஸெய்தான் 96 வாக்குகளைப்
பெற்று வெற்றி பெற்றிருப்பதாக லிபிய பாராளுமன்றத்தின் தலைவர் முஹம்மத்
யூஸுப் மக்ரிப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஹம்மத் ஹராரிக்கு 85 வாக்குகளே கிடைத்தன.
லிபியாவின்
இடைக்கால அரசாங்கத்தின் புதிய தலைவரான அலி ஸெய்தான் இருவார
காலப்பகுதிக்குள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வேண்டப்பட்டுள்ளார்.
அலி
ஸெய்தான் 1950 ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் முதுமானிப் பட்டத்தைப்
பெற்றார். 1975 – 1982 வரை வெளிவிவகார அமைச்சில் பணியாற்றினார். அதேவேளை
இந்தியாவுக்கான லிபிய தூதுவராக இரு வருடங்கள் கடமையாற்றினார்.
1994
தொடக்கம் இன்றுவரை மனித அபிவிருத்திக்கான ஜேர்மன் நிறுவனத்தின் தலைவராக
பணியாற்றி வருகிறார். 1982 – 1992 வரை லிபிய தேசிய முன்னணியின் உறுப்பினராக
இருந்ததுடன், 1989 இல் இருந்து இன்று வரை லிபிய மனித உரிமைகள் லீக்கின்
உத்தியோகபூர்வ பேச்சாளராகவும் அவர் கடமையாற்றி வருகிறார்.
ஐரோப்பாவுக்கான லிபிய இடைக்கால சபையின் விஷேட தூதுவராகவும் அவர் பணியாற்றினார்.
0 Comments