Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

கரை ஒதுங்கும் கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பில் மக்கள் அச்சம்! அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வேன்டுகோள்!

ஜுனைட்.எம்.பஹ்த்: 
கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு கரையோரப்பகுதிகளில் பாரியளவான மீன்கள் மற்றும் கடல் பாம்பு, கடல் இரட்சத ஆமை போன்ற கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குகின்றன.
நேற்று மயக்கமுற்ற நிலையில் உயிருள்ள மீன்களும், இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்களும்
மக்கள் மத்தியில் இயற்கை அனர்த்தம் குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கும் மீன்களை சமையலுக்காக மக்கள் எடுத்துச்செல்கின்றனர். இந்த மீன்கள் உயிருடன் இருந்தாலும் ஒரு வித மயக்க நிலையிலேயே காணப்படுவதால், இதை அரசாங்கத்தின் பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிவித்தல் இன்றி உண்ணுவதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர் அஷ்ஷேய்க் இனாமுல்லாஹ் தெறிவித்தார்.
மூன்று நாட்களாகியும் இப்பகுதி அமைச்சர்களும் அரசாங்க அதிகாரிகளும் ஏன் பாரா முகமாக இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. அரசாங்கம் இதை ஒரு செய்தியாக அறிவிக்கிறேதே அன்றி, மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இதுவரை அறிவிக்கவில்லை. உரியவர்கள் உடனடியாக மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்!
இலங்கையின் கிழக்கு கடற்பிராந்தியத்தில் சர்வதேச கப்பல்கள் இரசாயனக் கழிவுகளை கொட்டியிருக்கலாம். சர்வதேச மற்றும் பிராந்திய காலநிலை மற்றும் பூகோள அவதான நிலையங்கள் எதுவும் இதுவரை இயற்கை அனர்த்தம் குறித்த எச்சரிக்கையை விடுக்கவில்ல. இலங்கை அரசும், கிழக்கு மாகாண அரசும் இந்த புதிய நிலைவரம் குறித்து உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு, மக்களை அற்றிவுருத்த வேண்டும். சர்வதேச கப்பல்கள் சோமாலிய கடற்பிராந்தியத்தில் இரசாயனக் கழிவுகளை கொட்டி விடுவதனைத் தடுக்க ‘கடற்கொள்ளையர்’ என அழைக்கப்படும் போராளிகள் பிரயத்தனங்கள் மேற்கொள்வது தெரிந்ததே. அதே போன்று, இலங்கையின் தென்கடலை சர்வதேச குப்பை மேடாக மாற்றுவதற்கான முயற்சிகள் ஏதும் நடைபெறுகின்றனவா என அரசு கண்டறிய வேண்டும்.
உரிய அதிகரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேன்டும் என வேன்டுகோள் விடுக்கபட்படுகிறது.

Post a Comment

0 Comments