Header Ads Widget

News Line

6/recent/ticker-posts

அறபுத் தேசங்கள் சுதந்திரத்தையும் நீதியையும் நோக்கி பயணிக்கின்றது - ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி...

எகிப்தின் முதல் ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி முதல் முறையாக நேற்று துருக்கிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு 12 மணி நேரம் கழித்து விட்டு கெய்ரோ திரும்பியுள்ளார்.

முர்ஸியின் துருக்கி பயணத்தின்போது, அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லா குல் மற்றும் பிரதமர் ரஜம் தய்யிப் அர்துகான் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதேபோன்று துருக்கியின் ஆளும் அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின்
மாநாட்டிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி, அறபுத் தேசங்கள் சுதந்திரத்தையும் நீதியையும் நோக்கி பயணிக்கின்றன என்றார்.
மேலும், அறபு நாடுகளும் அறபு வசந்தமும் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உங்களது உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, துருக்கி ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியுள்ளதுடன், இரண்டு பில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments