பாகிஸ்தானில் இருந்து ஒரு உயர் மட்ட தூதுக்குழுவிற்கு கான் தலைமை தாங்குவார், மேலும் அவரது மற்ற கடமைகளுக்கு உட்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது பயணத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 2016 ல் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளவுள்ள முதல் விஜயம் இதுவாகும்.
கொவிட் 19 தொற்றை அடுத்து இலங்கைக்கு வருகை தரும் முதல் அரசாங்க தலைவராக இம்ரான் கான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments