உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று (08) வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 77 லட்சத்து 20 ஆயிரத்து 836 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வைரஸ் பரவியவர்களில் 70 லட்சத்து 11 ஆயிரத்து 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 311 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனாவில் இருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:- 

அமெரிக்கா - 1,94,011

பிரேசில் - 1,27,517

இந்தியா - 71,642

மெக்சிகோ - 67,781

இங்கிலாந்து - 41,586

இத்தாலி - 35,563

பிரான்ஸ் - 30,764

ஸ்பெயின் - 29,594

பெரு - 29,976

ஈரான் - 22,542

கொலம்பியா - 21,817