தாதி சேவையில் மேலும் 3025 பேர் இணைப்புமேலும் 3025 மாணவர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்கள் சுகாதார அமைச்சின் www.health.gov.lk என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் தரமான
தாதி சேவையை வழங்கும் நோக்கில் 6025 தாதி மாணவர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 3000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களுடைய பெயர் விபரங்களும் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டன.

தற்போது நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் 28,000 தாதியர்கள் கடமை புரிவதாகவும் அதனை 46,000 மாற்றுவதே தமது நோக்கம் எனவும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை கட்டமைப்பில் சிறந்த சேவையாற்றும் தாதியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.