வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை இல்லாமல் செய்துவிட்டே அந்த சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தெற்கில் உள்ள சிங்கள தீவிர அரசியல் சக்திகள் கோரி வந்திருந்தன. இந்தக் கோரிக்கையை ஏற்று அவ்வாறு அதிகாரங்களை தேர்தலுக்கு முன்னர் இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது,
இருப்பினும் வடமாகாண சபைத் தேர்தலானது, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் குறைக்கப்படாத நிலையிலேயே நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவும் குரல் கொடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

0 Comments