கமல் ஹாசனின் விஸ்வரூபம்
திரைப்படத்தினை நிரந்தரமாக இலங்கையில் தடை செய்ய வேண்டும் என என்ற
நிலைப்பாட்டை மீண்டும் தாம் உறுதிப் படுத்துவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
அறிவித்துள்ளது.இன்று இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் குறித்த
படத்தினைப் பார்த்த பின்னர் தமது
தீர்மானத்தை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளதாகஅந்த அமைப்பு தெரிவித்துள்ளது.விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தற்காலிக
தடை விதிக்கப்பட்டுள்ள
நிலையில் இன்று தவ்ஹீத் ஜமாஆத் மற்றும் முஸ்லிம்
பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் புத்திஜீவிகள் ஆகியோருக்கு இந்த
திரைப்படம் காண்பிக்கப்பட்டதனையடுத்தே மேற்கண்டவாறு அந்த அமைப்பு
தெரிவித்துள்ளது .
குறித்த படத்தில் முஸ்லிம்களை
பயங்கரவாதிகளாக காட்டியதோடு பயங்கரவாதிகளை வழிநடத்தும் ஒரு வழிகாட்டி நூலாக
அல் குர்ஆன் . காட்டுபடுவதாக முஸ்லிம் அமைப்புக்கள் குற்றம்
சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
அதேவேளை இலங்கையில் விஸ்வரூபம்
திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை
தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது. என்றும் எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு
ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள்
கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர
பிபிசியிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது .
0 Comments