மஹியங்கனை - மீகஹபிட்டிய பிரதேசத்தில் கறுப்பு நிற மழை பெய்துள்ளது.
அந்தப் பிரதேசத்தில் நேற்றிரவு பெய்த கடும் மழையுடன் இந்த கறுப்பு நிற மழையும் பெய்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதேச மக்களில் பலர் கறுப்பு நிற மழை நீரை பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்திலும் கறுப்பு நிற மழை பெய்துள்ளமை குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார கூறினார்.
மஹியங்கனையில் பெய்த கறுப்பு நிற மழையின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்