அண்மையில்
இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி
எதிர்வரும் 7ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ்மொழி மூலமாக பரீட்சைக்கு
தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாவதற்கு மேலும் நான்கு
தினங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .
0 Comments