ஈரான் விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
 ஈரான் கடந்த 2011 ஆம் ஆண்டு விண்வெளிக்கு குரங்கினை அனுப்பி சோதனை செய்தது.
 இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
 எனினும் மேற்குலக நாடுகளுக்கு போட்டியாக ஈரான் தனது அறிவியல் வளர்ச்சியை எட்ட 2020-க்குள் மனிதனை விண்வெளியில் அனுப்பி சோதனை செய்ய தீர்மானித்தது.
 தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியால் நேற்று தலைநகர் டெஹரான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ராக்கெட் மூலம் 'பிஸ்காம்" என்ற விண்கலத்தினுள் குரங்கினை வைத்து விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக சோதனை செய்தது.
 ஈரான் குடியரசு தொலைகாட்சி இதனை அதிகாரப்பூர்வமான வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது.