மையப் படுத்தி ஜனாதிபதி இனவாதத்தை தூண்டகூடிய நடவடிக்கை என்று தோன்றும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொது பல சேனா இயக்கத்தை கோரியுள்ளார் .
மேலும் ஜனாதிபதி ‘பெளத்த மதத்தை
பலப்படுத்துவதற்காக செயலாற்றுவது சரி ,ஆனால் மற்ற மதங்களுடம் மோதலை
உருவாக்காமல் அது செய்யப்படவேண்டும் ‘என்று பொது பல சேனாவிடம்
தெரிவித்துள்ளார் .
இந்த சந்திப்பில் பொது பல சேனா இயக்கத்தின்
ஐந்து தேரர்கள் கலந்து கொண்டுள்ளனர் இயக்கத்தின் தலைவரான கிரமா விமலஜோதி ,
கலாகோடாதே ஞானசார , விதாரடெனிய நந்த தேரர்கள் உட்பட ஐந்து தேரர்கள் கலந்து
கொண்டுள்ளனர்.
இதில் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான தினனேஷ் குணவர்தன ,
சுசில் பிரேமஜயந்த, புத்த சாசன பிரதியமைச்சர் குணவர்த்தன , ஜனாதிபதியில்
செயலாளர் லலித் வீரதுங்க, மேல்மாகாண சபை அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமையவின்
கொள்கை பரப்பு செயலாளருமான உதய கம்பன்பில ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஊடகளில் வெளியான பல்வேறு தகவல்களை மையப்
படுத்தி ஜனாதிபதி இனவாதத்தை தூண்டகூடிய நடவடிக்கை என்று தோன்றும் எந்த
நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் என்று பொது பல சேனா இயக்கத்தை கோரியுள்ளார்.
இதற்கு அவர்கள் தமது அமைப்பின் பெயரை தமது
சொந்த நோக்கத்துக்காக வேறுசிலர் பயன்படுத்துவதாகவும். மற்ற மதங்களை
நிந்திப்பதை தாம் ஏற்றுகொள்ள வில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம்
பொது பல சேனா இயக்கத்திதினர் தெரிவித்துள்ளனர் .
ஜாதிக ஹெல உதய கம்பன்பில
இதில் கலந்துகொண்ட மேல் மாகாண சபை
அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமையாவின் கொள்கை பரப்பு செயலாளருமான உதய கம்பன்பில
போலியான பெயர்களை பயன்படுத்தும் வேறு குழுக்கள் சம்பந்தமாக
விளக்கியுள்ளதுடன். மதங்கள் மத்தியிலான சமாதானத்தின் முக்கியத்துவத்தையும்
வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்துள்ள உதய
கம்பன்பில குளியாபிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பன்றியின் உருவத்தை
பயன்படுத்தி இஸ்லாத்தை அவமதியாரி செய்தமையையும் கண்டித்துள்ளார் ‘நாங்கள்
எமது மதத்தை விரும்புகிறோம் அவர்கள் அவர்களின் மதத்தை விரும்புகிறார்கள் ‘
என்றும் தெரிவித்துள்ளார்
‘நாங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தும் அவர்களின் ஒழுங்குமுறையில் இருந்தும் பாடம் கற்க வேண்டும்’
இந்த சந்திப்பில் தாமும் குளியாபிட்டி
செயல்பாடுகளை ஏற்றுகொள்ள வில்லை என்று பொது பல சேனா இயக்கத்தின் தலைவர்கள்
தெரிவித்துள்ளனர் .நோலிமிட் சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த அவர்களில்
ஒருவர் ‘நாங்கள் அதை செய்யவேண்டாம் என்று கூறினோம். இது பெளத்த
மதத்துக்கும் ,நாட்டுக்கும் நல்லதல்ல என்று கூறினோம்’ . ‘எங்கள் மத்தியில்
எமது மதத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் .
‘நாங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தும் அவர்களின் ஒழுங்குமுறையில்
இருந்தும் பாடம் கற்க வேண்டும் என்றார்’ .
ஜனாதிபதி மஹிந்த, அமைச்சர் பசில் ஹலால் சான்றிதழ் விளக்கம்
ஹலால் சான்றிதழ் தொடர்பில் அதிகமாக
கேள்விகள் எழுப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஹலால் சான்றிதழ் முறைமை
தொடர்பாகவும் , வியாபரத்துக்கு அவை பயன்படுத்தப் படும் காரணம் பற்றியும்
விளக்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை
இந்த கலந்துரையாடல் முடிவதக்கு முன்னர்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை நாட்டில் இன ,மத அமைதியை
பராமரிக்க உதவுமாறு அந்த பெளத்த தேரர்களிடம் கோரியுள்ளார் . இது தொடர்பில்
அவர்களிடம் ஜனாதிபதி கூறும்போது ‘ பெளத்த மதத்தை பலப்படுத்துவதற்காக
செயலாற்றுவது சரி ,ஆனால் மற்ற மதங்களுடம் மோதலை உருவாக்காமல் அது
செய்யப்படவேண்டும் ‘என்று தெரிவித்துள்ளார் .
-LM-

0 Comments