2012 டிசம்பர் 21ஆம் திகதி நிபுரு என்ற கற்பனையான கோள், பூமியின் மீது மோதப்போவதாக வெளியான இணையதள தகவல்கள் அறிவியல் உலகின்
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி 2012 DA 14 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்ல இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல் பூமியைப் போலவே 366.2 நாட்களுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.
கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி 2 கோடியே 60 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து சென்ற இந்த விண்கல், இந்த முறை வெறும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
இது நமது புவிநிலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும் பாதையில் குறுக்கிடுவதால் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

0 Comments