கண்டி D.S.சேனாநாயக்க வீதியிலுள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.
இதில் இரண்டு வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தீ ஏற்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீதியிலிருந்து சடலமொன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.