haniya-morsi


பிரதமர் கலாநிதி இஸ்மாயில் ஹனிய்யா, எகிப்து ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். காஸா ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாகவே அவ்விருவரும் பேசியுள்ளனர்.
20 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, எகிப்திய ஜனாதிபதியின் இராஜதந்திர மற்றும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஹனிய்யா தமது நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக
பிரதமர் ஹிஷாம் கந்திலை காஸாவுக்கு அனுப்பிவைத்ததை அவர் சிலாகித்துப் பேசினார்.
தனது நாட்டின் முழு ஆதரவும் காஸா மக்களுக்கு இருக்கும் என ஜனாதிபதி முர்ஸி ஹனிய்யாவுக்கு உறுதி வழங்கினார். இது தொடர்பாக எகிப்து எடுத்துவரும் நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார்.
பலஸ்தீன மக்களின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கிய ஹனிய்யா, முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்